Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

திருமண விழாக்களில் பிரபலமாகும் மெஹந்தி அலங்காரம்

திருமண விழாக்களில் பிரபலமாகும் மெஹந்தி அலங்காரம்

மருதாணிப் பொடியுடன் யூகலிப்டஸ், லாவெண்டர், டீ ட்ரீ, கேஜ்புட் மற்றும் கிராம்பு எண்ணெய் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களைக் கலந்து இயற்கையான மெஹந்தி கூம்புகள் தயாரிக்கப்படுகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

மருதாணி பாரம்பரியமாக உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் என்ற நம்பிக்கையில் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் விரும்பப்படும் அழகுக் கலையாக மெஹந்தி மாறியுள்ளது.

வட இந்தியக் கலாசாரமாக அறியப்பட்டு வந்த மெஹந்தி தற்போது தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் வீட்டு நிகழ்வுகளிலும் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. இதுகுறித்து மெஹந்தி கலைஞரும், என்சிசி பயிற்றுநருமான சி.ஆர். காருண்யா கூறுகையில், முன்னர் மருதாணி இலைகளை அரைத்து விழுதாக்கி கைகளிலும் கால்களிலும் பூசுவது வழக்கமாக இருந்தது. தற்போது மருதாணி மூலம் பல்வேறு வடிவங்களில் அலங்காரம் செய்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக, திருமணங்களில் மணப்பெண்ணுக்கு மெஹந்தி இடுவது முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக மாறி வருகிறது.

மருதாணிப் பொடியுடன் யூகலிப்டஸ், லாவெண்டர், டீ ட்ரீ, கேஜ்புட் மற்றும் கிராம்பு எண்ணெய் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களைக் கலந்து இயற்கையான மெஹந்தி கூம்புகள் தயாரிக்கப்படுகின்றன. வணிக ரீதியாக விற்பனை செய்யப்படும் சில தயாரிப்புகளில் பாதுகாப்புப் பொருள்கள் மற்றும் வேதிப்பொருள்கள் சேர்க்கப்படலாம். இயற்கையான மருதாணிக் கலவையைப் புதிதாகத் தயாரித்து பயன்படுத்துவது சிறந்தது என்று காருண்யா கூறினார்.

மெஹந்தி இட்ட பிறகு இரண்டாவது நாளில் நிறம் அடர்த்தியாகத் தெரியத் தொடங்கும். திருமண நிகழ்ச்சியில் அடர்த்தியான நிறம் கிடைப்பதற்காக, முக்கிய நிகழ்ச்சிக்கு சுமார் 48 மணி நேரத்துக்கு முன்பாக மெஹந்தி இடுவது வழக்கம். இதன் நிறம் சுமார் ஏழு நாள்கள் வரை இருந்து, பின்னர் படிப்படியாக மறையும். மெஹந்தி இடுவதற்கான கட்டணம் கலைஞரின் அனுபவம் மற்றும் வடிவமைப்பைப் பொறுத்து மாறுபடுகிறது. புதிதாக இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை கட்டணம் வசூலிக்கின்றனர். அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் மணப்பெண்ணுக்கு விரிவான அலங்காரம் செய்வதற்கு ரூ.4,000 முதல் ரூ.5,000 அல்லது அதற்கு மேலும் கட்டணம் வசூலிப்பதாக அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
நாசா விண்வெளி ஆய்வுக்கு தலைமை விஞ்ஞானியாக பெங்களூரு ரம்யா தேர்வு
அடுத்த செய்தி
பிரான்ஸ் போராட்டத்தில் தீவைப்பு: 143 ஆண்டு நகராட்சி கட்டிடம் சேதம்

தொடர்புடைய செய்திகள்